மணிப்பூர் மாநில எல்லையில் 500 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் பிடிபட்டன. அசாம் ரீஃபிள்ஸ் எனும் சிறப்பு ராணுவ பிரிவு மற்றும் மணிப்பூர் காவல்துறையினர் இந்த ரெய்டை நடத்தியுள்ளனர்.
மணிப்பூர், 43 அசாம் ரீஃபிள்ஸ் மணிப்பூர் எல்லை நகரான மோரே டெங்நோபால் மாவட்டம் முதலமைச்சர் பிரேங் சிங்
இன்று (செவ்வாய் கிழமை) மணிப்பூர் மாநிலம் டெங்நோபால் மாவட்டத்தில், மாநில எல்லை நகரான மோரே எனும் ஊரில் 500 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து அம்மாநில முதல்வர் பிரேங் சிங் தெரிவித்துள்ளார்.
சிறப்பு ராணுவ பிரிவான அசாம் ரீஃபிள்ஸ் எனும் குழுவில் இருந்து 43 வீரர்கள் மற்றும் மணிப்பூர் மாநில காவல்துறையினர் இணைந்து இந்த ரெயிடை நடத்தியுள்ளனராம்.
இதில், போதை மருந்துகள், சோப் மற்றும் சில சிறு பெட்டிகள் மூலம் கடத்தப்பட்டதை அதிகாரிகள் துல்லியமாக கண்டறிந்து அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம்.
ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்துகளின் மதிப்பு சுமார் 500 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது மணிப்பூர் எல்லையில் பிடிபட்ட அதிகபட்ச போதை பொருள்களில் ஒன்று. இந்த தகவலை மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேங் சிங் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் கடத்தலில் ஈடுபட்டதாக பிடிபட்டவனை போலீசார் மற்றும் சிறப்பு ராணுவத்தினர் விசாரித்து வருகின்றனர்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…