டெல்லி: 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல் போல அல்லாமல், இந்த முறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க போதிய இடங்கள் இல்லாத காரணத்தால் கூட்டணியை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுவரையில் தனிப்பெரும்பான்மை ஆட்சி என்பதால் மற்ற கட்சிகளின் கருத்துக்களை கலந்தாலோசிக்காமல் ஆளும் பாஜக தங்கள் செயல்திட்டங்களை செயல்படுத்தி வந்தது. ஆனால் இனி கூட்டணி கட்சிகளிடம் ஆலோசிக்க வேண்டிய கட்டயத்தில் உள்ளது. இதனால் பாஜகவால் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த ஒரே நாடு ஒரே தேர்தல், சிஏஏ சட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
NDA கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் (JD(U)) செய்தித் தொடர்பாளர் KC தியாகி ANI செய்தியாளர்களிடம் கூறுகையில்,” அக்னிவீரர் திட்டத்தால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெற்றுள்ள வரவேற்பு பற்றி கேள்வி எழுப்பப்படும்.
அதன் குறைபாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு அக்னிவீர் திட்டம் அகற்றப்பட வேண்டும் என்று எங்கள் கட்சி விரும்புகிறது. இதுகுறித்து எங்கள் தேசியத் தலைவர் சட்ட கமிஷன் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். நாங்கள் இதற்கு எதிரானவர்கள் அல்ல. அதனால் அனைத்து கூட்டணி கட்சிகளுடன் பேசி தீர்வு காண வேண்டும் என KC தியாகி கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…