திமுக சொன்னால் சொன்னதை செய்யும் என மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்தனர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படைக் கொள்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார். “சமூகநீதி, சமத்துவம், சமூக நல்லிணக்கம் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அரசே திராவிட மாடல் அரசு” என்று அவர் தெளிவுபடுத்தினார். எதிர்க்கட்சிகளால் முடியாது என்று கூறப்பட்ட திட்டங்களைக்கூட நிறைவேற்றியுள்ளதாகவும், தமிழகத்தின் திட்டங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று மக்கள் பயனடைவதே தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக ஆட்சியின் சாதனைகளை பல மாநிலங்கள் பின்பற்றி [...]