கடந்த 4 வாரங்களில் 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு – லாவ் அகர்வால்

இந்தியாவில் கடந்த 4 வாரங்களில் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,14,40,951 ஆக உள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 4,21,382 ஆக உள்ளது. இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,06,21,469 ஆக இருக்கிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 4 வாரங்களில் 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது என்றும் நாடு முழுவதும் 62 மாவட்டங்களில் மட்டுமே தினசரி கொரோனா பாதிப்பு 100க்கும் மேல் உள்ளது எனவும் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கேரளா 7, மணிப்பூர் 5, மேகாலயா 3 ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது என்றும் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.4% ஆக உயர்ந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025