சீனாவின் வூகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டை மட்டுமின்றி உலகையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறையத்தொடங்கியுள்ளது. ஆனால் அதேசமயம் பல நாடுகளில் அது அதன் தீவிரத்தை காட்ட தொடங்கியுள்ளது. இந்த கொரோனா இத்தாலி, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை நிலைகுலைய வைத்துள்ளன.
இந்நிலையில் க இந்த கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட உகான் நகரத்திற்கு நோய்தொற்றை தடுக்க இந்திய மக்களின் சார்பில், இந்திய அரசு முகமூடிகள், கையுறைகள் மற்றும் பிற அவசர மருத்துவ உபகரணங்கள் அடங்கிய சுமார் 15 டன் மருத்துவ உதவிகளை வழங்கி இருந்தது. இதற்கு சீன தரப்பிலும் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்த கொடிய வைரஸ் இந்தியாவில் ருத்ர தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில் நம் அண்டை நாடான சீனா, இந்தியாவில் கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்துவதற்காக 1 லட்சத்து 70 ஆயிரம் முழு கவச உடைகளை(பிபிஇ) சீனா அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் நேற்று தகவல் தெரிவித்தது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்த போது, மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு சீனா மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது. அதற்கு உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உபகரணங்களை அங்கு அனுப்பி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய அரசு கடந்த மார்ச் 25 -ம் தேதி கொரோனா சிகிச்சைக்காக உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. இதையெடுத்து சில நாடுகளுக்கு மட்டும் மத்திய அரசு மருந்து வழங்கி வருகிறது.
இந்தியாவிடம் , அமெரிக்கா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை ஆர்டர் செய்திருந்தது. மத்திய அரசு விதித்த தடையால் அந்த மாத்திரைகள் கிடைப்பதில் அமெரிக்காவிற்கு சிக்கல் ஏற்பட்டது.இதையெடுத்து நேற்று முன்தினம் பிரதமர் மோடியிடம் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொலைபேசி மூலம் பேசினார்.
இதையெடுத்து வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது ,பிரதமர் மோடியிடம் நேற்று பேசினேன். உரையாடல் நன்றாக இருந்தது. ஆர்டர் செய்த மருந்துகளை பெற அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும் என கூறினேன். ஒரு வேளை அவர் மருந்துகளை அனுப்ப அனுமதி கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அவ்வாறு நடந்தால் அதற்கானவிளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறினார்.
இதையெடுத்து அமெரிக்கா கொரோனா தடுப்புக்காக மருந்து கேட்டதால் மத்திய அரசு மனிதாபிமான அடைப்படையில் அமெரிக்காவிற்கு இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…