கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டுக்குள்ளே, பாலகோட் பகுதிக்குள் இந்திய விமானப்படை விமானங்கள் பாய்ந்து சென்று குண்டு வீசி தீவிரவாத முகாம்களை அழித்து விட்டு திரும்பி வந்தன. இதையடுத்து இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்த முற்பட்டது. அதை இந்திய விமானப்படை சிறப்பாக கையாண்டு விரட்டியடித்தது. இந்த நிலையில், இந்திய ராணுவம் தற்போது பாகிஸ்தானுக்கு மற்றொரு அதிர்ச்சியை அளித்துள்ளது.
அதாவது ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா செக்டார் பகுதியில், பீரங்கி குண்டுகளை பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறி வைத்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம், அவ்வப்போது ஜம்மு-காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவ வீரர்கள் மீதும், இந்திய மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, எங்கே இருந்து தாக்குதல் தொடுக்கப்படுகிறதோ, அந்தப் பகுதியை குறிவைத்து இந்தியா இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…