இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதாவின் சகோதரி கொரோனா தொற்றால் மரணம்!

கடந்த வாரம் தாய் உயிரிழந்த நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சகோதரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. குறிப்பாக அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பிரபலங்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் கொரோனாவின் தாக்கம் மிக தீவிரமாகி கொண்டு செல்கிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சகோதரி வசந்தலா சிவகுமார் அவர்கள் கொரோனா தொற்றால் தற்பொழுது உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே கடந்த வாரம் புதன் கிழமை தன் இவரது தாயார் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவரின் தாயார் உயிரிழப்புக்கு பின்பு தான் இவரது சகோதரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெங்களூருக்கு அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இதனை அடுத்து மே 5ஆம் தேதி மாலை வேதா கிருஷ்ணமூர்த்தியின் சகோதரி வசந்தலா சிவகுமார் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தில் வேதாவின் தந்தை மற்றும் அவரது சகோதரர், இரண்டாவது சகோதரி ஆகியவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025