பல மல்யுத்த வீராங்கனைகள் மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் கூறினர். இதைத்தொடர்ந்து பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த தேர்தலில் நிற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில் பிரிட்ஜ் பூஷன் சிங் நண்பருமான சஞ்சய் குமார் தேர்தலில் நின்றார்.
சமீபத்தில மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் முடிவு வெளியானது. இதில் சஞ்சய் குமார் வெற்றி பெற்றார். இதற்க்கு மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளின் எதிர்ப்பு தெரிவித்தனர். சஞ்சய் குமார் தலைவராக தேர்ந்தெடுத்தவுடன் சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். அதேபோல இந்திய மல்யுத்த வீரரும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பி அளிப்பதாக அறிவித்தார். இந்நிலையில், இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…