சௌமியா விஸ்நாதன் (25 வயது) என்பவர் பிரபல ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடேவில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று காலை 3:30 மணியளவில் சௌமியா தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சில மர்ம நபர்கள் சௌமியாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த கொடூர கொலை சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சௌமியா கொலை வழக்கில் ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் குமார் மற்றும் அஜய் சேத்தி ஆகிய 5 பேர் மார்ச் 2009-ல் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கைதான ரவி கபூர் மற்றும் அமித் சுக்லா ஆகியோர் 2009 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஜிகிஷா கோஷ் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் தொடர்புடையவர்கள் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த வழக்கில் 15 வருடங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ரவி கபூா், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் குமாா் மற்றும் அஜய் சேத்தி ஆகிய 5 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி ரவீந்திர குமார் பாண்டே, குற்றவாளிகளான ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அஜய் குமார் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்தார்.
இந்த வழக்கில் 5-வது குற்றவாளிஅஜய் சேத்திக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.7.25 லட்சம் அபராதம் விதித்தது. குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை ரூ.12 லட்சம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…