குப்பை தொட்டியில் குழந்தையை வைத்துவிட்டு, தூய்மை பணியில் ஈடுபாட்ட தாய்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சுஜா என்பவர், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 3 வயதில், பொட்டு என்ற குழந்தை உள்ளது. அவரை தனியாக விட்டுச் செல்ல இடம் இல்லாத காரணத்தினால் குழந்தையை தன்னுடனேயே அழைத்துச் செல்கிறார்.
இதனையடுத்து, இவர் அந்த குழந்தையை குப்பை தள்ளுவண்டி வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள, ஒரு குப்பை கூடையில் அமர வைத்துவிட்டு, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி சுஜா தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த சம்பவம் பார்ப்போரின் மனதை நெகிழ வைத்தது. இதனையடுத்து, கொரோனா பரவல் காலத்திலும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மாநகராட்சி வழங்க வேண்டுமென்றும், அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய உதவியை அரசு செய்துகொடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…