கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல்..! வாக்குகளை பதிவு செய்த முன்னாள், இந்நாள் முதல்வர்கள்..!

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி வாக்களித்துள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 10ம் தேதியான இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் அம்மாநில முதல்வரும், பாஜக வேட்பாளருமான பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி வாக்களித்துள்ளனர்.
முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது :
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான வாக்குகளுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று 100% உறுதியாக உள்ளதாகவும், முன்னாள் முதல்வர் மற்றும் பலர் மீது லோக் ஆயுக்தாவில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, என்றும் கூறினார்.
#WATCH | Karnataka CM Basavaraj Bommai says, “Congress track record about corruption – a lot of people are out on bail. There are corruption charges and more than 60 cases have been filed with Lokayukta against former CM and others. What are they saying…?#KarnatakaElections https://t.co/K0jST7TuUT pic.twitter.com/5RyG8IP0Oy
— ANI (@ANI) May 10, 2023
எச்டி குமாரசாமி பேசியதாவது:
கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் தலைவருமான எச்டி குமாரசாமி தனது குடும்பத்தினருடன் ராமநகராவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பிறகு, கர்நாடகா சரியான வளர்ச்சி பெற மக்கள் ஜேடிஎஸ் வேட்பாளர்களை ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் கட்சி வெற்றி பெற்று ராஜாவாகும் என்று முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி தெரிவித்தார்.
#WATCH | “We are requesting people to bless JDS candidates to get proper development. Our party will going to be a King,” says Former Karnataka CM & JDS leader HD Kumaraswamy after casting his vote #KarnatakaAssemblyElection2023 pic.twitter.com/6nyuWLQ0gc
— ANI (@ANI) May 10, 2023