சற்று நேரத்தில் நிறைவடைகிறது கர்நாடகா சட்டமன்ற தேர்தல்..!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குகள் பதிவாகியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 10ம் தேதியான இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.
அதன்படி, மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குகள் பதிவாகியுள்ளது. முன்னதாக, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.18% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இரண்டு மணி நேரம் கழித்து தற்பொழுது 65.69% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிற நிலையில், இன்னும் சற்று நேரத்தில் நிறைவடைய உள்ளது.
மேலும், இந்த சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் உள்ள 58,545 வாக்குச் சாவடிகளில் மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுகள் வரும் மே 13 ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025