நடிகர் சூர்யாவின் லேட்டட்ஸ் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
unknown nodeKanguva [Image source : twitter/ @letscinema]
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த ஷெட்யூல் நிறைவடைந்தது. அப்போது சூர்யா மற்றும் ஜோதிகாவின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
unknown nodeபுகைப்படத்தில் நடிகர் சூர்யா சற்று குண்டாக இருக்கிறார். எனவே, புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியுடன் சூர்யாவை இது..? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node