கர்நாடக தேர்தல் – 135 இடங்களில் பாஜக வெல்லும் – எடியூரப்பா

Yediyurappa

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சிகாரிபுராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கு முன்னோட்டமாக கர்நாடக தேர்தல் பார்க்கப்படுகிறது. அந்தவகையில், 224 தொகுதிகளை கொண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் போட்டியிடும் இத்தேர்தலில், பகுஜன் சமாஜ், சிபிஐ, சிபிஎம், இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. எனவே, ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் என மும்முனை போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  தென் மாநிலங்களில் ஒரே முதல்வரை கொண்டுள்ள பாஜக அதை தக்க வைக்குமா?, பெரும் வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அதை பெறுமா? என தீர்ப்பு எழுதுகின்றனர் கர்நாடக மக்கள் இன்று. இதனால் பெரும் எதிர்பார்ப்பில் கர்நாடக தேர்தல் உள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 7.88% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், கர்நாடக தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா. தனது சொந்த தொகுதியான சிகாரிபுராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார் எடியூரப்பா. இதன்பின் பேசிய அவர், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 130 இடங்கள் முதல் 135 இடங்களில் பாஜக வெற்றி பெரும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்