கேரளா குண்டுவெடிப்பு – டொமினிக் மார்டினை வீட்டிற்கு அழைத்து சென்று விசாரிக்கும் காவல்துறை..!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமசேரி எனும் ஊரில் நேற்று முன்தினம் போல கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் தொடங்கி நடைபெற்று கொண்டு இருக்கும் போது காலை 9.40 மணி அளவில் தொடர்ந்து 3 குண்டுகள் வெடித்தன.
முதலில் இந்த வெடிகுண்டு விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண்மணி உயிரிழந்தார். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சைளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு காரணமான டொமினிக் மார்ட்டின் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், யூ டியூப் பார்த்து வெடிகுண்டு தயாரிக்க கற்றுகொண்டதாகவும், இந்த வெடிகுண்டு தயாரிக்க ரூ.3 ஆயிரம் செலவிட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, ஆலுவா அத்தாணி பகுதியில் உள்ள டொமினிக்கின் வீட்டிற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு பின் மார்டினை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
July 4, 2025
3 இடங்களில் சிகரெட் சூடு…இதயத்தில் ரத்தக்கசிவு? அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்த அதிர்ச்சி தகவல்!
July 4, 2025