கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தனது வழக்கமான கொரோனா அறிவிப்பிற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
நிதிச் சுமை:
மேலும் அவர் கூறுகையில்,”மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளுமாறு மத்திய அரசு கூறியிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மாநிலங்களுக்கு ஏற்கனவே நிதிச் சுமையில் இருப்பதால் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குமாறு அவர் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
மாநிலங்களை மேலும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளுவதற்குப் பதிலாக, மத்திய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
தடுப்பூசி இலவசம்:
“கேரள அரசு தனது வாக்குறுதிகளைத் திரும்பப் பெறாது என்றும் , 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவோம்” என்று பினராயி விஜயன் கூறினார்.
மாநிலத்தின் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து விவாதிக்க மாநில அரசு அனைத்து தரப்பு கூட்டத்தை அழைத்துள்ளதாகவும்,அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டமும் கூட்டப்படும். மேலும்,கொரோனா மேலாண்மை குறித்து விவாதிக்க மற்றும் பரிந்துரைகளை எடுக்க தனியார் மருத்துவமனைகளுடன் ஒரு கூட்டமும் நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.
முழு ஊரடங்கு இல்லை:
“கேரளா தற்போதைய கட்டத்தில் எந்தவொரு முழு ஊரடங்கையும் செயல்படுத்தப் போவதில்லை. அதற்கு பதிலாக, மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார்.”
கேரள அரசு ஏற்கனவே இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது மற்றும் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்ட அளவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன.
கேரளாவில் இன்று மட்டும் 22,414 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் இன்று ஒரே நாளில் 22 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…