கேரள தங்க கடத்தல்- ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு ஆகஸ்ட் 21 வரை நீதிமன்றக் காவல்.!

Published by
மணிகண்டன்

ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவருக்கும் ஆகஸ்டு 21-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில்  கடந்த ஜூலை 5-ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இது அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்களான ஷரீத், கேரள தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா ஆகியோருக்கு இந்த கடத்தலில் முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதில் ஷரித் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஸ்வப்னா மற்றும் அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர் ஆகியோர் தலைமறைவாக பெங்களூருவில் பதுங்கியிருந்த இருவரையும் என்.ஐ.ஏ.எனப்படுகின்ற தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் அதிரடியாக கைது செய்து கேரளா முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை கொச்சினில் உள்ள என்ஐஏ  சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் .

பின்னர், என்ஐஏ அதிகாரிகள்  முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்து வந்த நிலையில், விசாரணை இன்றுடன் நிறைவடைந்ததும் கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.

அப்போது,  ஸ்வப்னா, அதிகாரிகளின் விசாரணையில் மனஉளைச்சல் ஏற்பட்டது என்றும், தனது இரு குழந்தைகளையும் காண ஆவலுடன் இருக்கிறேன் என நீதிபதிகளிடம் கூறினார். இதனால், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவருக்கும் ஆகஸ்டு 21-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அவர்களின் ஜாமீன் மனுக்கள் மீது ஆகஸ்ட் 5-ம் தேதி  விசாரணைக்கு வருகிறது.

இதற்கு முன் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு முக்கிய குற்றவாளியான சரித்தை ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க  உத்தரவிட்டபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…

6 minutes ago

சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…

1 hour ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!

சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…

1 hour ago

காருக்குள் கருகிய நிலையில் சடலம்.., தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…

1 hour ago

தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை! இன்றும், நாளையும் மிக கனமழை – வானிலை மையம்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…

2 hours ago

சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…

4 hours ago