இறந்தவராக கருதப்பட்ட ஒருவரின் புகைப்படத்தை எடுக்க சென்ற டோனி தாமஸ், அவருக்கு உயிர் இருப்பதை உணர்ந்துள்ளார்.
புகைப்பட கலைஞரான 43 வயதான டோனி தாமஸ், இறந்த சிவதாசனின் உடலை புகைப்படம் எடுப்பதற்காக கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள போலீசாரிடம் அழைப்பு வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக போலீசாருடன் இணைந்து இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார் டோனி. இந்த நிலையில் சிவதாசனின் சடலத்தை புகைப்படம் எடுத்த போது அவருக்கு உயிர் இருப்பதை உணர்ந்துள்ளார்.
வெளிச்சம் இல்லாத அறை என்பதால் உடலின் பக்கத்தில் சென்று தான் புகைப்படம் எடுக்க வேண்டும். அப்போது இறந்ததாக கருதிய சிவதாசன் சுவாசம் விடும் சத்தத்தை உணர்ந்ததாகவும், அவர் உயிருடன் இருப்பதை உணர்ந்த டோனி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பாலக்காட்டில் வசித்து வரும் சிவதாசன், அவரது வீட்டில் தலையில் அடிப்பட்டு மயங்கி கிடந்ததை அடுத்து இறந்து விட்டதாக கருதியுள்ளனர். தற்போது உயிருள்ளதை உணர்ந்த போலீசார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…