துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில் நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது. இந்த விமானத்தில் 2 விமானிகள், 6 விமான பணிப்பெண்கள், 10 கைக்குழந்தைகள் உட்பட 191 பேர் பயணம் செய்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விமானத்தை இயக்கிய 2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சில பயணிகள் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது .இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது .மேலும் தேசிய மீட்டப்புப்படை வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்த விமானம் துபாயிலிருந்து, கோழிக்கோடு வந்ததால் அதிக பயணிகள் இந்தியாவை சார்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டு பயணிகள் பயணம் செய்தார்களா..? என விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் முழு விவரம் தொடர்ச்சியாக பதிவிடப்படும் ..
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…