மதுபான கொள்கை வழக்கு ..! EDயின் குற்றப்பத்திரிகையை ஏற்றது டெல்லி உயர்நீதிமன்றம் ..!

Arvind Kejriwal

அரவிந்த் கெஜ்ரிவால் : மதுமான கொள்கை வழக்கு தொடர்பாக, சிபிஐயால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை இன்று நீதிமன்றம் விசாரணையை எடுத்துக்கொண்டது.

கடந்த ஜூன் 26 ஆம் தேதி அன்று, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ இந்த வழக்கில் அவரை முறைப்படி கைது செய்தது. இது தொடர்பான வழக்கில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மீ கட்சிக்கு எதிராக அமலாக்க துறையினார் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மேலும், பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 7-துணை வழக்குப் புகாரை ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியான காவேரி பவேஜா விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட வினோத் சவுகான் மற்றும் ஆஷிஷ் மாத்தூர் ஆகியோருக்கு எதிராக அமலாக்க துறையினர் 8 துணை குற்றப்பத்திரிகைகளையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் ஜூலை 12-ம் தேதி புரொடக்ஷன் வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ கைது செய்து 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தற்போது மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், மதுமான ஊழல் வழக்கில் ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டு வழக்குகளையும் டெல்லி உயர்நீதிமன்றம் வருகிற ஜூலை 17ஆம் தேதி அன்று விசாரணைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்