கூட்டத்தொடர் 13-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தொடர் அமளியால் முன்னதாகவே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து பெகாசஸ், வேளாண் சட்டம், விவசாயிகள் போராட்டம், விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன.
இந்த நிலையில், இன்று காலை அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அதே விவகாரத்தை குறித்து கேள்வி எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மக்களவை தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டன. கூட்டத்தொடர் 13-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தொடர் அமளியால் முன்னதாகவே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 17 நாட்களும் எதிர்க்கட்சி அமளி காரணமாக மக்களவை முடங்கியது. இதனிடையே, இதுகுறித்து பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, மாநிலங்களவையின் மாண்பை காக்க, எம்.பிக்கள் தவறிவிட்டதாகக் கண்ணீர் மல்க தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு அவையில் எல்லை மீறிவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…