மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 423 லிருந்து 537 ஆக உயர்வு.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 2902 ஆகவும், பலி எண்ணிக்கை  68 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலம், மகாராஷ்டிரா 423, தமிழ்நாடு 411, டெல்லி 386, கேரளா 295 என இருந்து வந்த நிலையில், மகாராஷ்டிராவில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது மஹாராஷ்டிராவில் பாதிக்கப்பட்ட 423 லிருந்து 537 ஆக உயர்ந்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நேற்று மட்டும் மும்பை 28, தானே பிராந்தியம் 15, அமராவதி 01, பிசிஎம்சி 01, புனே 02 இது போன்ற புதிதாக 47 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் 50 பேர் வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

8 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

10 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

13 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

14 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

16 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

17 hours ago