கை தட்டினாலும்,டார்ச் அடிச்சாலும் கொரோனா பிரச்னை தீராது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார்.அதில் ,இன்று (ஏப்ரல் 5-ம் தேதி )இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தெரிவித்தார்.
வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் .வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என்று வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தார்.இதற்கு பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில்,கை தட்டினாலும் , டார்ச் அடிச்சாலும் கொரோனா பிரச்னை தீராது .கொரோனா வைரஸை கண்டறிய போதுமான அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை.இந்தியாவில் 10 லட்சம் பேரில் வெறும் 29 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் உலக அளவில் செய்யப்பட்ட பரிசோதனைகள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…