உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பு 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது.
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இந்நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், காங்கிரஸ் விரும்பினால் 2024-ல் பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் இணையலாம். 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024-ல் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லை. இப்போதைக்கு சோர்வடைய வேண்டாம். நேர்மறையாக சிந்தியுங்கள் என தெரிவித்துள்ளார்.
EVM-ல் கொள்ளை மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளன. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சோர்ந்துவிடாமல் அதே EVM இயந்திரங்களின் தடயவியல் சோதனைகளை நாட வேண்டும். அகிலேஷ் யாதவின் வாக்கு சதவீதம் இந்த முறை 20% லிருந்து 37% ஆக அதிகரித்துள்ளது என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…