SambitPatra [file image]
மம்தா பானர்ஜி இரக்கமற்றவர் என திரிணாமுல் காங்கிரஸை, பாஜக செய்தி தொடர்பாளர் கடுமையாக சாடியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜூன் 8ம் தேதி காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. உள்ளாட்சி தேர்தல் அறிவித்த நாள் முதல் தற்போது வரை மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த பயங்கர வன்முறைக்கு இடையே வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே வாக்குச் சாவடி சேதப்படுத்தப்பட்டு, வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. வன்முறைக்கு மத்தியில் வாக்குப்பதிவு செல்லாது என அறிவிக்கப்பட்ட 19 மாவட்டங்களில் உள்ள 696 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ஊடக அறிக்கைகளின்படி, பஞ்சாயத்து தேர்தல் வன்முறையின் போது குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டனர். குண்டுவெடிப்பு, போலி வாக்குப்பதிவு மற்றும் மோசடி ஆகியவை ஊடக அறிக்கைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் என்று கூறினார்.
மேலும், இவை அரசு ஆதரவுடன் நடத்தப்படும் கொலைகள். இரக்கமற்ற மம்தா பானர்ஜி, ஒரு ஊமைப் பார்வையாளராக இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார். இதற்கிடையில், இந்த உள்ளாட்சி தேர்தலில், மொத்தம் 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களுக்கும், 9,730 பஞ்சாயத்து ஊர் தலைவர் மற்றும் 928 மாவட்ட உள்ளாட்சி அமைப்பு இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின் இரண்டாம்…
அமெரிக்கா : பிரபல முன்னாள் WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (Hulk Hogan) தனது 71வது வயதில், நேற்றைய…
டெல்லி : தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் இன்று (ஜூலை 25) நாடாளுமன்றத்தில் பதவியேற்கின்றனர். அதன்படி, தி.மு.க…
சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…
சென்னை : மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல…
சென்னை : எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பஹத் பாசில் தமிழில் இந்த முறை வடிவேலுடன்…