Categories: இந்தியா

மணிப்பூர் கலவரம்: ஜூன் 24இல் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு.!

Published by
Muthu Kumar

மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்க ஜூன் 24ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

மணிப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பதற்றமான சூழ்நிலை நிலவிவருவதால், அம்மாநிலத்தின் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், நிலவரம் குறித்தும் ஆலோசனை செய்ய அனைத்து கட்சிகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துளளார். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் வந்ததை அடுத்து அமித்ஷாவின் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜூன் 23 ஆம் தேதி, அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவிருக்கும் நாளுக்கு முந்தைய தேதியில், 2024 தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கூட்நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.

மணிப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மைதேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட இன மோதல்கள் வன்முறையாக வெடித்ததில், 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. கடந்த மாதமும் அமித்ஷா, மணிப்பூர் சென்று அமைதியை கொண்டுவர பலதரப்பட்ட மக்களை சந்தித்து பேசினார்.

மீதே மற்றும் குகி ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களை அவர் சந்தித்து, அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவது குறித்தும் அமித்ஷா உறுதியளித்தார். மணிப்பூரில் தீ வைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற வன்முறை சம்பவங்களால் 110 க்கும் மேற்பட்ட உயிர்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.

Published by
Muthu Kumar

Recent Posts

தேனாம்பேட்டை சென்று மீண்டும் கிரீம்ஸ் ரோடு அப்போலோவுக்கு முதலமைச்சர் மாற்றம்.! காரணம் என்ன.?

சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில்,…

1 hour ago

முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு.., கேரளாவில் இன்று பொது விடுமுறை.!

திருவனந்தபுரம்: கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI(M)) மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் நேற்று (ஜூலை 21) திருவனந்தபுரத்தில்…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும் – வானிலை மையம்.!

சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய…

3 hours ago

விஜய் – சீமானுக்கு அதிமுக கூட்டணிக்கு நேரடி அழைப்பு விடுத்தார் இபிஎஸ்.!

சென்னை : வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளையும் கூட்டணிக்கு அழைத்தார். இதில்,…

3 hours ago

அவதார் 3வது பாகம் ‘ Avatar: Fire and Ash’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.!

அமெரிக்கா : உலக சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி, உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல்…

3 hours ago

முதல்வர் ஸ்டாலினின் உடல் நிலை குறித்து உதயநிதி கொடுத்த அப்டேட்.!

சென்னை : சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின்,…

4 hours ago