PM Modi - RahulGandhi - Mallikarjun kharge [File Image]
பிரதமர் மோடி, ராகுல் காந்தி, கார்கே என பல அரசியல் தலைவர்கள் பக்ரீத் தினத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்று இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களின் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே அனைத்து மசூதிகளிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் அவர்களின் வழக்கப்படி கால்நடைகளை குர்பானி (பலி) கொடுத்து சமைத்து அதனை ஏழைகளுக்கு, உறவினர்களுக்கு , நண்பர்களுக்கு என வழங்கி வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி முதல் ராகுல்காந்தி வரை பல்வேறு கட்சியினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி :
பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள். இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும். இது நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகாரிஜுன கார்கே :
பக்ரீத் பண்டிகை தியாகம், நம்பிக்கை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் உன்னத பண்புகளை எடுத்துறைக்கிறது. இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், சகோதரத்துவத்தின் பிணைப்பை வலுப்படுத்தவும், அமைதியான, இணக்கமான மற்றும் முற்போக்கான சமுதாயத்தை கட்டியெழுப்பவும் நாம் அனைவரும் உறுதியாக தீர்மானிப்போம்.
முன்னாள் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி :
இந்த மங்களகரமான தருணம் அனைவருக்கும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைத் தரட்டும். பக்ரீத் வாழ்த்துக்கள் என புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் :
பக்ரீத் நாளின் அன்பான வாழ்த்துக்கள். இந்த விழா சகோதரத்துவத்தையும் கருணையையும் வளர்க்கட்டும் என வாழ்த்தியுள்ளார் .
காங்கிரஸ் கட்சி :
அனைவருக்கும் பக்ரீத் தின வாழ்த்துக்கள். இந்த புனிதமான பண்டிகை மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஏராளமான ஆசீர்வாதங்களைக் கொண்டு வரட்டும். என காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளது.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் :
பக்ரீத் தின அன்பான வாழ்த்துக்கள். தியாகத்தின் இந்த புனிதமான நிகழ்வை நாம் கொண்டாடும்போது, அதன் ஆழமான படிப்பினைகளை – தன்னலமற்ற தன்மை மற்றும் அன்பின் முக்கியத்துவம் பற்றி சிந்திப்போம். பன்முகத்தன்மையைத் தழுவி, நமது சமூகங்களில் இரக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்துவோம் என தனது வாழ்த்துக்களை கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…