மேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திப்பு…!

Published by
லீனா

தமிழக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று  வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை சந்தித்து மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக பேசினார்.

இந்நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டியே தீருவோம் என பிடிவாதமாக உள்ளது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய  ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, மேகதாது அணை கட்டப்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

10 minutes ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

50 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago