Categories: இந்தியா

ஆண்கள் தான் பாவம்.! உடலுறவு சம்மத வயதை 16ஆக குறைக்க வேண்டும்.! ம.பி உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து.!

Published by
Muthu Kumar

பெண்பிள்ளைகள் உடலுறவுக்கு சம்மதம் அளிக்கும் வயதை 16 ஆகக்குறைக்க, ம.பி உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

மத்திய பிரதேசத்தில் 20 வயது இளைஞனுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில், பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, இது போன்ற வழக்குகளில் ஆண் பிள்ளைகள் மட்டும் குற்றவாளிகள் அல்ல, வயது காரணமாக ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுகின்றனர் என நீதிபதிகள் கூறினர்.

2012இல் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை 18 வயதாக அதிகரித்தது, சமூகத்தின் கட்டமைப்பை சீர்குலைத்துள்ளது என்று மத்திய பிரதேச உயர்நீதிமன்ற ஒற்றை அமர்வு நீதிபதி தீபக் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், இப்போதெல்லாம், 14 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு ஆணும் பெண்ணும், சமூக ஊடக விழிப்புணர்வு காரணமாக பருவமடைகிறார்கள்.

இதன் காரணமாக ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு அதன் பின் இறுதியில் உடல் உறவுகளில் செல்ல வழிவகுக்கிறது. முன்னதாக கடந்த 2020இல் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கருவுற்றதாக குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் கைது செய்யப்பட்டு 3 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்பட்ட நிலையில் நீதிபதி, 20 வயது இளைஞருக்கு எதிரான எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்தார், மேலும் சம்பவம் நடந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கு 16 வயது, அவர் தனது வாழ்வைக் குறித்து முடிவெடுக்கும் திறன் கொண்டவர் என்பதை தர்க்கரீதியானதாகக் கருதுகிறது.

இதில் ஆண்களின் தவறான நோக்கங்கள் எதுவும் இல்லை என்று தோன்றுகிறது எனக்கூறினார். மேலும்   பெண்களின் உடலுறவு ஒப்புதல் அளிக்கும் வயதை, 18ல் இருந்து 16 ஆக குறைப்பது குறித்து, அரசு சிந்திக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியது.

Published by
Muthu Kumar

Recent Posts

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…

1 minute ago

சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…

55 minutes ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!

சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…

1 hour ago

காருக்குள் கருகிய நிலையில் சடலம்.., தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…

1 hour ago

தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை! இன்றும், நாளையும் மிக கனமழை – வானிலை மையம்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…

2 hours ago

சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…

4 hours ago