மும்பை விளம்பரப்பலகை விபத்து- உயிரிழப்பு 14 ஆக உயர்வு.!

சென்னை: மும்பையில் ராட்சத விளம்பரப் பலகை கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
மும்பையின் காட்கோபர் பகுதியில் நேற்று வீசிய புழுதிப் புயலில், பெட்ரோல் பம்ப் மீது 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது, 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நேற்று இரவு 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 14 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குடிமைத்துறை அதிகாரிகளின் தகவலின்படி, இந்த விளம்பர பலகை சட்டவிரோதமானது என்று கூறியுள்ளது.
நேற்று வீசிய புழுதிப் புயல் காரணமாக மும்பை விமான நிலையத்தில் மாலையில் ஒரு மணி நேரம் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அது மட்டுமில்லாமல், உள்ளூர் ரயில்களின் சேவைகள் தாமதமானது, பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025