தேசிய கல்விக்கொள்கை பற்றி கருத்து தெரிவிக்க ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டது. பதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின் 3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் திருத்தப்பட்ட வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஆனாலும் புதிய கல்வி வரைவு கொள்கையை நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா நிகழ்ச்சி ஒன்றில் புதிய கல்வி வரைவு கொள்கையை பற்றி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், மூன்று வயதிலே மூன்று மொழி திணிக்கப்படுகிறது என்றும் மூன்று வயது குழந்தைகள் இதனை எப்படி சமாளிக்க போகிறார்கள். எல்லோரும் அமைதியாய் இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும் அனைவரும் அது குறித்து தங்கள் கருத்தினை உரக்கச்சொல்ல வேண்டும் என்று கூறி இருந்தார்.சூர்யாவின் கருத்துக்கு அதிமுக மற்றும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் திய கல்வி வரைவு கொள்கை குறித்து பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவித்ததற்காக நடிகர் சூர்யாவும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நடிகர் ரஜினி ஆகியோரும் மிரட்டப்படுகிறார்கள்.நடிகர் சூர்யா அவர்கள் கூறியுள்ள கருத்துக்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டுமா அல்லது ஆதரவு தெரிவிக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் கல்விக்கொள்கை தொடர்பாக கருத்து கூற அவகாசம் வழங்க கோரி தமிழக தலைவர்கள் மற்றும் அமைப்புகள் கோரிக்கை விடுத்ததால் மத்திய அரசு அவகாசத்தை கூட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது.ஜூலை 31-ஆம் தேதியுடன் அவகாசம் முடிய உள்ள நிலையில் தற்போது ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…