டில்லியில் நேற்று மார்ச்.,04ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர், பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான ஆவணங்களை வங்கிகள் அரசிடம் சமர்ப்பித்துள்ளன. கடந்த 2017 ல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. தற்போது 18 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இனி மீண்டும் வங்கிகளின் இணைப்பின் பிறகு 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும். ஏற்கனவே 2019 ஏப்ரல் மாதத்தில் பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கியுடன் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. தற்போது அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 வங்கியும், கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பொரேஷன் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும் இணைக்கப்படுகிறது. இந்த 10 வங்கிகள் இணைப்பிற்கு பின் இனி ஒட்டுமொத்த பொதுத்துறை வங்கிகளும் 4 வங்கிகளாக செயல்படும். இதனால் வங்கி பணியார்களுக்கோ, வாடிக்கையாளர்களுக்கோ எவ்வித பாதிப்பும் இருக்காது என அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…