மாணவ, மாணவியருக்கு இடையேயான பேதத்தை ஒழிக்க கேரள பள்ளியில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடை வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் மாணவ மாணவியருக்கு இடையேயான பாலின பேதத்தை கலைக்கும் விதமாக புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இந்த பள்ளியில் படிக்க கூடிய மாணவ, மாணவியர்கள் இருவருக்குமே மேல் சட்டையும், முக்கால் பேண்டும் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண்களுக்கு சுடிதார் மற்றும் ஸ்கர்ட்டுக்கு பதிலாக பேண்ட் அணியுமாறு கூறப்பட்டுள்ளது. மாணவிகளும் மாணவர்களைப் போலவே உடையணிந்து இருப்பதால் இருவருக்கும் இடையேயான பேதங்களை கலைக்க முடியும் எனவும், மாணவிகள் கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக நடக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கூறியுள்ள பள்ளி முதல்வர் சீமா அவர்கள், இந்த திட்டத்தின் மூலம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும் மனதளவில் பேதங்களை தவிர்த்து பழகுகின்றனர் எனவும், மாணவிகள் சுதந்திரமாக ஓடி ஆடி விளையாட முடிகிறது எனவும், சம அளவில் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு இடையே சுதந்திரம் தரப்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், அதனால்தான் இவ்வாறு செய்துள்ளோம் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், கேரளாவிலுள்ள பள்ளியில் எடுக்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…