காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக முடிவு செய்தார்.ராஜினாமா தொடர்பாக கடிதம் அளித்துவிட்டதாக விளக்கம் அளித்தார் ராகுல்.மேலும் நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாள் தொடர முடியாது.மேலும் தாமதிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு உடனே புதிய தலைவர் தேர்வு செய்ய வேண்டும் என்றும் நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாள் தொடர முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
இன்று டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் .கூட்டத்தில் சோனியா காந்தி,ராகுல் காந்தி ,வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆனால் கூட்டத்தின் பாதியிலே காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வெளியேறினார்கள்.இதன் பின்பு சோனியா மற்றும் ராகுல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் இருவரும் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது .இன்று இரவு 9 மணிக்குள் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்றும் காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…