கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்கு 31-ம் தேதி வரை தடை விதித்தது மத்திய அரசு.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், இங்கிலாந்தில் இருந்து கடந்த வாரம் கர்நாடகாவுக்கு வந்த பயணிகளை கண்டறிந்து சோதனை செய்து வருகிறோம். கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதன்படி, கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் புதிய வகை கொரோனா பரவுவதால் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எனவே, இரவில் தேவையில்லாமல் நடமாடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…