இமாச்சலப் பிரதேசத்தில் ஜனவரி 5 வரை இரவு ஊரடங்கு உத்தரவு..!

Published by
murugan

கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இமாச்சல பிரதேச அரசு நேற்று மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை ஜனவரி 5 வரை நீட்டிக்க முடிவு செய்தது. இந்த நடவடிக்கை மாநில அமைச்சரவையால் மறுஆய்வுக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட மாவட்டங்களில் சிம்லா, குலு, மண்டி மற்றும் காங்க்ரா ஆகியவை அடங்கும். கடந்த மாதம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்ததால் நவம்பர் 23 அன்று இந்த மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என டிசம்பர் 15 வரை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, 1 முதல் 4 வரையிலான வகுப்புகள் மற்றும் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாஸ் என அரசு தெரிவித்தது. இருப்பினும்,  5, 8, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும். மேலும், 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தேர்வு பாடத்திட்டத்தில் 30 சதவீத குறைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அரசியல் பேரணிகள், பொது குறை தீர்க்கும் கூட்டங்கள் போன்றவற்றிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், 200 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியில் ஒன்றுகூட அனுமதி கொடுக்கவில்லை.

Published by
murugan

Recent Posts

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

2 minutes ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

28 minutes ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

3 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

4 hours ago