கடந்த 7 நாட்களில் இந்தியா முழுவதிலும் 188 மாவட்டங்களில் புதியதாக கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருட காலமாக உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ள நிலையில், முதல்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை இந்தியாவில் 10,916,589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,55,732 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 10,621,220 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது 1,39,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 11,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 90 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள், நாடு முழுவதும் கடந்த 7 நாட்களில் 188 மாவட்டங்களில் புதியதாக கொரானா வைரஸ் தொற்றுக்கள் பதிவாகவில்லை எனவும், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி 80 முதல் 85 சதவீதம் முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…