சிறுபான்மை சமூகத்தினரை நாட்டிலிருந்து வெளியேற்றும் தைரியம் யாருக்கும் இல்லை என்று நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் 71 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குபதிவானது கடந்த அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்றது. அதனையடுத்து 94 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குபதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றதை தொடர்ந்து மீதமுள்ள 78 இடங்களுக்கான மூன்றாம் கட்ட வாக்குபதிவு நாளை நடைபெறவுள்ளது . இந்த நிலையில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் கிஷன்கஞ்ச் மற்றும் அராரியா மாவட்டங்களில் தேர்தல் பேரணியில் ,சீமஞ்சல் பிராந்தியத்தில் உள்ள முஸ்லீம்களான சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற வதந்தியை உடைத்தெறிந்து யாரையும் நாட்டிலிருந்து வெளியே அனுப்ப யாருக்கும் தைரியம் இல்லை என்று பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் ,தனது அரசாங்கம் பிராந்தியத்தில் அன்பு,அமைதி மற்றும் சகோதரத்துவத்தை பரப்புவதற்கு செயல்பட்டு வருவதாகவும், சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் எப்போதும் தனது அரசாங்கம் பணியாற்றி வருவதாகவும், மாநிலத்தில் வகுப்புவாத நல்லிணக்கத்தை உருவாக்கி அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறினார் . மேலும் 15 ஆண்டுகளாக ஆர்.ஜே.டி ஆட்சியில் இருந்து எந்தவொரு வளர்ச்சி பணிகளையும் செய்யாமல் நேரத்தை வீணடித்து வருவதாகவும் கூறிய அவர் எதிர்க்கட்சியினர் சிலர் சாதிகளுக்கும் மத குழுக்களுக்கும் இடையில் சண்டையை ஊக்குவிக்க விரும்புவதாகவும் குற்றம்சாட்டினார் .
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…