Categories: இந்தியா

கனமழையால் ஸ்தம்பிக்கும் வட இந்தியா.! உ.பியில் மட்டும் 24 மணிநேரத்தில் 34 பேர் உயிரிழப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

கனமழையால் உத்தரபிரதேசத்தில் 24 மணிநேரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயைபு வாழ்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல், தொடர் மழையால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்ற காட்சிகளும் இணையத்தில் வெளியானது.

மேலும், வட இந்தியாவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடி, மின்னல் மற்றும் மழையால் உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழையால் உத்தரபிரதேசத்தில் 24 மணிநேரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனமழை பெய்ததால், 24 மணி நேரத்தில் மின்னல் மற்றும் மழையால் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர்.

நிவாரண ஆணையர் அலுவலகம் அளித்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் பெய்த கனமழையால் மின்னல் தாக்கி 17 பேரும், நீரில் மூழ்கி 12 பேரும், கனமழை காரணமாக 5 பேரும் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மின்னல், வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்,  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சத்தை உடனடியாக வழங்கவும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி.., கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..!

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று (ஜூலை 30 ) 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது இதுவரை பதிவு…

14 minutes ago

”மெல்லக்கூடிய புகையிலை பயன்படுத்தினால் அபராதம்” – மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும்…

1 hour ago

கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் – டிஜிபி அறிவிப்பு.!

சென்னை : நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக…

1 hour ago

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் கனமழை வெளுத்து வாங்கும்.! எங்கெல்லாம் தெரியுமா.?

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

2 hours ago

“1998ல் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து வரலாற்றுப் பிழையை செய்துவிட்டார் ஜெயலலிதா” – கடம்பூர் ராஜு கடும் விமர்சனம்.!

சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு "வரலாற்றுப்…

3 hours ago

ஜடேஜா வாஷிங்டனை சதம் அடிக்க விடாமல் அவுட் ஆக்கியிருக்கணும்..! நாதன் லயன் பேச்சு!

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.…

3 hours ago