நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி.., கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..!

ரஷ்யாவின் கம்சட்கா கடற்கரையில் அதிக அலைகள் காரணமாக ஐந்து பெலுகா திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.

4 Massive Whales

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று (ஜூலை 30 ) 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும். இந்த நிலநடுக்கத்தின் மையம் 20.7 கிலோமீட்டர் ஆழத்தில், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கியிலிருந்து சுமார் 119 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 16 நாடுகளுக்கு சுனாமி வார்னிங் விடுக்கப்பட்டு கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ரஷ்யா, அமெரிக்காவிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், பெலுகா திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருப்பதைக் காட்டும் வைரல் வீடியோ, அவற்றின் பேரிடர் உணரும் திறன்கள் குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது. இயற்கை பேரழிவுகள் ஏற்படுவதற்கு முன்பு விலங்குகள் அசாதாரண நடத்தைகளை வெளிப்படுத்திய பல நிகழ்வுகள் உலகில் நடந்துள்ளன.

அந்த வகையில், ரஷ்யாவின் கம்சட்கா கடற்கரையில் அதிக அலைகள் காரணமாக ஐந்து பெலுகா திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. உள்ளூர் மீனவர்கள் உதவிக்கு விரைந்து வந்து அவற்றை  பாதுகாப்பாகவும் குளிராகவும் வைத்திருந்தனர். மீண்டும் அலை வந்தபோது, ஐந்து மீன்களும் மீண்டும் கடலுக்கு நீந்திச் சென்றதாக சொல்லப்படுகிறது.


இதனிடையே, ஜப்பானின் சில தீவுகளில் சுனாமி அலை ஏற்பட்டது. ஜப்பானின் சிம்பா பகுதியில் ஏற்பட்ட சுனாமி அலையில் பெரிய திமிங்கலங்கள் அடித்து வரப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சுனாமி குறித்த எச்சரிக்கையால் பசிபிக் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்