”மெல்லக்கூடிய புகையிலை பயன்படுத்தினால் அபராதம்” – மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி.!
மெட்டல் டிடெக்டர்கள் மூலம் கண்டறிய முடியாததால், அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் உடல் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை : மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்ட்ரல் பாதுகாப்பு கண்காணிப்பு அறை, விதிமீறல்களை தீவிரமாகக் கண்டறிந்து பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெல்லும் புகையிலை பொருட்களின் விளைவாக எச்சில் துப்புவதாலும், குப்பைகள் போடுவதாலும் தூய்மையையும் சுகாதாரத்தையும் பராமரிக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்துகின்றன.
புகையிலை பயன்பாடு உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், பொது இடங்களில் சுகாதாரமற்ற நிலையை உருவாக்குவதாகவும் CMRL தெரிவித்துள்ளது. இதேபோல், பெங்களூரு மெட்ரோவிலும் (BMRCL) புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்
புகையிலையை உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதுடன், பொது இடங்களில் சுகாதாரமற்ற நிலைமைகள் பரவுவதற்கும் காரணமாகிறது. மெட்ரோ இரயில்கள் மற்றும்…
— Chennai Metro Rail (@cmrlofficial) July 30, 2025