(Representational image)
ஒடிசா மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க, தேர்வை நேரலை செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், நடப்பு ஆண்டில் உயர்நிலைக் கல்வி கவுன்சிலின் (CHSE) 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நேரடியாக ஒளிபரப்ப செய்ய ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே, தேர்வு அறையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்பட உள்ளது. வருடாந்திர தேர்வுகளை நடத்துவதைக் கருத்தில் கொண்டு, 2024ல் வெளிப்படையான முறையில், உயர்நிலைக் கல்வி (CHSE) தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதன்மூலம் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் ஸ்ட்ராங் ரூம் (EMHs), மைய கண்காணிப்பாளர் அலுவலகம், தேர்வு அறைகள் மற்றும் அனைத்து ஆய்வகங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை பதிவு செய்வது கட்டாயமாகும்.
5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..? வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்..!
இது தவிர, CHSE, பள்ளி மற்றும் கல்வித் துறை, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் உள்ள அதிகாரிகள் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து, இந்த நிகழ்வுகள் அனைத்தையும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்.
மேலும், தேர்வு அறை, ஸ்ட்ராங் ரூம், ஆய்வகங்களில் CCTV (நிறுவப்படாவிட்டால்) பொருத்துமாறு உயர்நிலைப் பள்ளி அதிகாரிகளுக்கு CHSE உத்தரவிட்டுள்ளது. கேமரா சோதனை செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
ஒடிசா மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடத்தப்படும் என்றும், இதில் 3.70 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுவார்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…