Categories: இந்தியா

ஒடிசா கோர விபத்து… உயிரிழந்தோர் எண்ணிக்கை 238 ஆக உயர்வு.!

Published by
Muthu Kumar

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 238 ஆக உயர்வு என  ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் நேற்று மூன்று ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகியது. ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று ஷாலிமார்- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 233 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தற்போதுவரை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காயமடைந்த 650க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்திற்கு சென்று மேற்பார்வையிட்டு மீட்புப்பணிகளை மேலும் துரிதப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by
Muthu Kumar

Recent Posts

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

57 minutes ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

1 hour ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

2 hours ago

ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…

3 hours ago

விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் – ரெய்னா.!

டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…

3 hours ago

“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…

4 hours ago