Categories: இந்தியா

பில்கிஸ் பானு வழக்கு.! ஒரு குற்றவாளி சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா.? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.!

Published by
மணிகண்டன்

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் பில்கிஸ் பானு எனும் கர்ப்பிணி பெண் ஓர் கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த 2008ஆம் ஆண்டு அவர்களுக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்று வந்த 11 குற்றவாளிகளும் தண்டனை குறைப்பு விதிப்படி விடுதலை செய்யப்பட்டார்.

இந்த விடுதலையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், சுபாஷினி அலி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை அண்மையில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜால் புயான் ஆகியோர் தலைமையிலான நீதிபதி அமர்வு விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணையில் குஜராத் அரசு தரப்பில், கடந்த 2008ஆம் ஆண்டு தண்டனை பெற்ற 11 பேரும் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து விட்டனர். 1992 சட்டத்திருத்தம் படி, தண்டனை குறைப்பு விதிகளின்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று விடுதலை செய்யப்பட்டனர் என விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த விசாரணையில் நீதிபகள் கூறுகையில், குற்றவாளிகளின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அவர்கள் எந்த விதிகளின்படி விடுதலை செய்யப்பட்டனர்.? ஏற்கனவே தண்டனை குறைப்பு செய்யப்பட்ட பிறகு மீண்டும் எப்படி தண்டனை குறைக்கப்பட்டது .? 1992 தண்டனை குறைப்பு கொள்கை எந்தளவுக்கு மற்ற கைதிகளுக்கும் பயன்பட்டது என்றும்,  இது எவ்வளவு தூரம் செயல்பாட்டில் உள்ளது என்றும், இது சம்பந்தமான தெளிவான தகவல்களை தர வேண்டும் என்றும் குஜராத் மாநில அரசுக்கு உத்தரவிட்டு, இவ்வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டு, தண்டனை அனுபவித்த ஒருவர் எப்படி சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. குஜராத் கலவர வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான  மல்ஹோத்ரா என்பவர் வழக்கறிஞராக தொடர ஆரம்பித்தார். இது குறித்து தான் நீதிபதி அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.

இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற அமர்வு, 2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த வழக்கு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர் எப்படி சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். சட்டம் ஒரு உன்னதமான தொழிலாக இருக்க வேண்டும். என  கூறினர்.

இது குறித்து வாதிட்ட மல்ஹோத்ரா, தான் விடுதலை பெற்று ஏறக்குறைய ஒரு வருடம் முடிந்துவிட்டது, என் மீது ஒரு வழக்கு கூட இப்போது இல்லை. நான் ஒரு மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயத்தில் வழக்கறிஞராக இருக்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்னரே நான் ஒரு வழக்கறிஞராக இருந்தேன். தற்போது நான் மீண்டும் பயிற்சி செய்யத் தொடங்கினேன். என்று மல்ஹோத்ரா தெரிவித்தார்.

தண்டனைக்குப் பிறகு, வழக்கறிஞராக தொடர உரிமம் வழங்க முடியுமா? சட்டம் ஒரு உன்னதமான தொழிலாக இருக்க வேண்டும். ஒரு குற்றவாளி சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதை பார் கவுன்சில் (இந்தியா) தான் சொல்ல வேண்டும். நீங்கள் ஒரு குற்றவாளி, அதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்களுக்கு வழங்கப்பட்ட விடுதலையின் காரணமாக நீங்கள் சிறையில் இருந்து வெளியே உள்ளீர்கள். தண்டனை குறைக்கப்பட்டது மட்டுமே நீங்கள் இன்னும் தண்டனை காலத்தில் தான் இருக்கிறீர்கள் என உச்சநீதிமன்ற அமர்வு கருத்து கூறி வழக்கு விசாரணையினை ஒத்திவைத்துள்ள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆல் – அவுட்: மளமளவென சரிந்த விக்கெட்ஸ்.., ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்! ஹைதராபாத் மாஸ் வெற்றி.!!

லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…

4 hours ago

தவெக-வின் பொதுச் செயலாளர் ஆகிறார் IRS அதிகாரி அருண்ராஜ்.?

சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…

4 hours ago

SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!

லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…

6 hours ago

அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!

அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…

7 hours ago

ரெட், ஆரஞ்சு அலர்ட் எதிரொலி – விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை.!

நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…

8 hours ago

RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…

8 hours ago