உத்தரப் பிரதேசம் மாநிலம், மொராதாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி)-யில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசுகையில், இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடு, இங்கு கட்டுப்பாடற்ற மக்கள்தொகை நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல, நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை நெருக்கடியைக் கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டம் வேண்டும் என வலியுறுத்தி, அதில் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இது தொடர்பாக மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
தெலுங்கானாவில் நடைபெறவிருக்கும் நகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கான பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி, அப்படி பேசியதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். எனக்கு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கின்றன. பின்னர் பல பாஜக தலைவர்களுக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள். மேலும் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே ஆர்எஸ்எஸ்-க்கு இருக்கிறது என்றும், இந்தியாவின் உண்மையான பிரச்சனை மக்கள் தொகை கிடையாது. வேலைவாய்ப்பின்மை தான் என தெரிவித்தார்.
மேலும், எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார், பின்னர் 2018-ல் வேலைவாய்ப்பின்மை காரணத்தினால் ஒரு நாளைக்கு 36 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக நரேந்திர மோடியின் அரசை ஒவைசி குற்றசாட்டினார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களால் வேலைவாய்ப்பை கொண்டுவர முடியாது. அதனால் தான், 2 குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறீர்கள். அதைத்தொடர்ந்து இந்திய மக்கள் தொகையின் 60% சதவீதம் பேர், 40 வயதிற்கு கீழ் இருப்பவர்கள் என்றும் ஒவைசி பதில் கருத்து தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…