டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள் பயணமாக (ஏப்ரல் 21-24, 2025) வருகிறார். இந்தப் பயணம், இந்திய-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், பல்வேறு முக்கிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கும் நோக்கமாகக் கொண்டது. இவர் ஏப்ரல் 21, 2025 அன்று மாலை 6:30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் புவிசார் அரசியல் தொடர்பான பிரச்சினைகளை பற்றி விவாதிக்க உள்ளார். […]
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு பெண், நீச்சல் குளத்தில் மூழ்கியதால் உடல்நிலை மோசமடைந்து மேதாந்தா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார். அங்கு வென்டிலேட்டர் உதவியுடன் அவர் அரை மயக்க நிலையில் இருந்தார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 6 அன்று, அவர் மருத்துவமனை ஊழியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு (டிஜிட்டல் ரேப்) உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் அதிர்ச்சியான சம்பவத்தின்போது அறையில் […]
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த அந்த இளைஞர், உணர்ச்சிவசப்பட்ட நிலையில், தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்து, பாலத்தின் உயரமான பகுதியில் நின்று மிரட்டல் விடுத்தார். இந்த தகவல் உடனடியாக பொன்னானி மற்றும் மாறாடு காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த இடத்திற்கு […]
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை வெளியிடும் முக்கிய அரசு அமைப்பாகும். சமீபத்தில், NCERT ஆங்கில மொழி பாடநூல்களுக்கு இந்தி மொழியில் உள்ள பெயர்களை (ரோமன் லிபியில்) பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம், குறிப்பாக தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இந்தி மொழி திணிப்பு என்ற கண்டனம் தெரிவித்தனர். இந்திய கலாச்சாரத்தின் வேர், பன்மொழி, அனுபவக் கற்றல் மற்றும் கல்வி […]
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் சந்தித்து பேசினார். அப்போது மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளை விரிவுவுபடுத்த பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இந்த சந்திப்பை அடுத்து பிரதமர் மோடி நேற்று எலான் மஸ்க் உடன் தொலைபேசியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தனது எக்ஸ் […]
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில், அந்த நிறுவனங்கள் வரும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு தகவல்களின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டும் கட்டணங்களை அதிகரிக்கத் தயாராகி வருகின்றன, இது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு ரீசார்ஜ்கள் இரண்டையும் பாதிக்கும். இதற்குக் காரணம் 5G நெட்வொர்க்கின் வளர்ச்சி என்று கூறப்படுகிறது. மூலதன தேவை […]
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.தமிழ்நாட்டில், ஆளுநர் ஆர்.என். ரவி பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார். இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது. இந்த சூழலில் மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த […]
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில் ஓட்டுநர்/வாகன உரிமையாளர் ரீசார்ஜ் செய்து வைத்து கொள்ள வேண்டும் என்றும், அதன் பிறகு டோல்கேட் கடந்து செல்லும் போது Fastag பார் கோடு மூலம் ஸ்கேன் செய்து சுங்கக்கட்டணம் வங்கி கணக்கு வாயிலாக நேரடியாக வசூல் செய்யப்பட்டுவிடும். இந்த முறையின் மூலம் வசூல் செய்யப்படுவதால் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் அதிகமான சில சமயம் வாகனங்கள் நீண்ட […]
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் சுமன் துபே மற்றும் பிறரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான பணமோசடி விசாரணையில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் […]
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு வங்க முதல்வரை கடுமையாக சாடி சில விஷயங்களை பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” மதச்சார்பின்மை என்ற பெயரில், கலவரக்காரர்களுக்கு அமைதியின்மையை உருவாக்க முழு சுதந்திரத்தையும் மேற்கு வங்கத்தில் அரசு வழங்கியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது, ஆனால் அங்கு அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. […]
ஹைதராபாத் : நேற்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் தெலங்கானாவில் மாநில அரசு ஒரு முக்கிய உள் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தியது. பட்டியலின (எஸ்.சி) பிரிவினருக்கு உள்இடஒதுக்கீடு குறித்த அரசாணையின் முதல் பிரதியை தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பெற்றுக்கொண்டார். இதன் மூலம், தெலங்கானா மாநிலமானது பட்டியல் சாதிகளுக்கு உள் இடஒதுக்கீடு திட்டத்தை சட்டப்பூர்வமாக அமல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றது. இந்த சட்டம் […]
ஆந்திரா : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா தனது மகன் தீ விபத்தில் சிக்கி உயிர்தப்பியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருமலை வெங்கடேஸ்வரருக்கு நன்றி செலுத்த முடிவு செய்து சில விஷயங்களை செய்திருக்கிறார். கடந்த ஏப்ரல் 8 அன்று, சிங்கப்பூர் பள்ளியில் பயின்று வரும் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர், அங்கு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியுள்ளார் என்றும், இதனால் கை, கால்களில் காயம் ஏற்பட்டது என்றும் தகவல் வெளியாகி […]
திருச்சூர் : நட்புக்கு ஒண்ணுன்னா நண்பர்கள் ஓடி வந்துருவாங்க., எனும் சொற்றொடர்களை அடிக்கடி கேட்டிருப்போம். அதற்கு ஏற்ற பல சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் கேரளா மாநிலம் திருச்சூரில் நிகழ்ந்துள்ளது. தன் நண்பனிடம் இருந்து ஒரே ஒரு போன் கால், சட்டை கூட அணியாமல் அடுத்த நிமிடம் வந்து நின்றுள்ளார் ஆம்புலன்ஸ் டிரைவர் அஜ்மல். திருச்சூர் மாவட்டம் எங்கண்டியூர் பகுதியை சேர்ந்த 24 வயதான அஜ்மல் எனும் ஆம்புலன்ஸ் […]
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறுகிறார் எனக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும், ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆளும் திமுக அரசு வரவேற்பு தெரிவித்து இருந்தது. இந்த தீர்ப்பு […]
சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில் அடைத்து வைத்து கொண்டு செல்ல முயன்ற நபர் வசமாக சிக்கிக்கொண்டார். இந்த சம்பவத்தின் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பதிலளித்த பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி (PRO), ‘மாணவர்கள் “குறும்புத்தனமாக நடந்து கொண்டனர்” என்றும் அது பெரிய விஷயமல்ல. யார் அந்த பெண்> என்று விசாரிக்கையில் அந்த மாணவரின் […]
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், வங்கிகளில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்து 6% ஆக அறிவித்துள்ளார். இந்த முடிவானது கடந்த ஏப்ரல் 7 முதல் 9 (இன்று) வரை நடைபெற்ற MPC ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. RBI ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்ற பிறகு, 2வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. […]
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க் சங்கர் பவனோவிச் சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வருகிறார். இவரது மனைவி அன்னா லெஷ்னேவா சிங்கப்பூரில் முதுகலை படிப்பு பயின்று வருவதால் அவரது மகனும் அங்கு பயின்று வருகிறார். இந்நிலையில், சிங்கப்பூர் பள்ளியில் பயின்று வரும் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர், அங்கு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியுள்ளார் என்றும், இதனால் […]
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது. மத்திய அரசு கொடுத்துள்ள இந்த அறிவிப்பின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரி ஒவ்வொரு லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. கலால் வரி என்பது எரிபொருள் விலையில் சேர்க்கப்படும் ஒரு முக்கிய அம்சம் என்பதால், கலால் வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என வாகன ஓட்டிகள் அச்சத்தில் இருந்தனர். […]
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் “பலாயன் ரோகோ, நவுக்ரி தோ” (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு) என்ற பெயரில் நடைபெற்ற பேரணியில், கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். பேரணியில் கலந்துகொண்டு அவர் பேசுகையில் ” பிஹார் இளைஞர்கள் வேலை தேடி மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலையை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இளைஞர்கள் தங்கள் திறமையாலும் உழைப்பாலும் எதையும் சாதிக்கக் கூடியவர்கள். […]
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் இந்து அமைப்புகள் வகுப்புவாத கலவரத்தைத் தூண்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரயாக்ராஜ் பகுதியில் பேரணியாகச் சென்ற இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திடீரென சையத் சலார் காசி தர்காவில் ஏறி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷங்களை எழுப்பி அங்கு கொடிகளை அசைக்க, கீழே நின்றிருந்தவர்கள் உற்சாகமாக கோஷங்களை எழுப்பி கோஷமிட்டனர். இவர்கள் எப்போது திருந்துவார்கள் […]