அவற்றில் பெரும்பாலானவற்றில் வன்முறை வெடித்தது. ஏராளமான பொதுச்சொத்துக்களும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டது. இதிலும் குறிப்பாக லக்னோ, மீரட் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் நடந்த வன்முறையில் இதுவரை 19 பேர் பலியாகினர். அதில், மீரட் நகரில் போராட்டம் நடத்தியவர்களை நோக்கி காவல்துறை அதிகாரி ஒருவர் , “பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்” என்று கூறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியும், மீரட் காவல்துறை கண்காணிப்பாளருமான அகிலேஷ் நாராயணன் அளித்துள்ள விளக்கத்தில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் சிலர் காவல்துறையினர் மீது கற்களை வீசி “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகவும், பாகிஸ்தானை அவ்வளவு விரும்பினால் அங்கே சென்றுவிடுங்கள் என்று தான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு ஆதரவாக கோசம் போடுவது இந்திய இறையாண்மைக்கு நல்லது இல்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…