பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றுக் கொண்டார்.
பாகிஸ்தானின் கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு அந்நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான்கான்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் நமிபிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.
இதனைத் தொடர்ந்து,நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் பதவியை இம்ரான் கான்இழந்ததை தொடர்ந்து,புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டார்.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் தேர்தலை இம்ரான்கான் கட்சியினர் அனைவரும் புறக்கணித்ததால் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான ஷபாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில்,பாகிஸ்தானின் 23-வது பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றுக் கொண்டார்.இதனால்,அவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,பிரதமர் கூறுகையில்:”பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட எச்.இ.மியான் முஹம்மது ஷபாஸ் ஷெரீப் அவர்களுக்கு வாழ்த்துகள்.பயங்கரவாதம் இல்லாத பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலத்தன்மையை இந்தியா விரும்புகிறது.இதன் மூலம் நமது வளர்ச்சி சவால்களில் கவனம் செலுத்தி,நமது மக்களின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்ய முடியும்”,என்று தெரிவித்துள்ளார்.
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…