திரைப்படத் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டிய நடிகை பயல் கோஷ், இந்த வழக்கு தொடர்பாக இன்று டெல்லியில் உள்ள தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மாவை சந்தித்தார்.
இதற்கு முன், திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் எதிராக மும்பையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர், அனுராக் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு அக்டோபர் 1 -ம் தேதி, அனுராக் காஷ்யப்பை பாலியல் வன்கொடுமை வழக்கில் வெர்சோவா போலீசார் விசாரித்தனர்.
ஒரு நாள் கழித்து அவரது வழக்கறிஞர் பிரியங்கா கிமானி நடிகை பயல் கோஷ் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், பயல் கோஷின் புகார் ஒரு “வெளிப்படையான பொய்” என்று கிமானி கூறினார்.மேலும், 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனுராக் தனது ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக இலங்கையில் இருந்தார் என்பதற்கு ஆவண சான்றுகளை அனுராக் வழங்கியுள்ளார்.
இதுபோன்ற எந்தவொரு சம்பவமும் இதுவரை நடக்கவில்லை என்று அனுராக் திட்டவட்டமாக மறுத்துள்ளார், அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார் ” என்று அனுராக் வழக்கறிஞர் கூறினார்.
இந்த வழக்கு முழுவதையும் மும்பை காவல்துறையினர் நியாயமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாக கோஷ் முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…