ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ,முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறையில் உள்ள ப.சிதம்பரம் சார்பாக அவரது குடும்பத்தார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.அந்த பதிவில்,சில மக்கள் என்னிடம்,இந்த ஒப்பந்தத்தில் கோப்புகளை முன்மொழிந்த எந்த அதிகாரிகளும் கைது செய்யப்படவில்லை. ஆனால் இறுதியாக கையெழுத்திட்ட நீங்கள் மட்டும் எப்படி கைது செய்யப்பட்டீர்கள் என்று கேள்விகள் எழுப்புகிறார்கள் .ஆனால் எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை. அதிகாரிகள் கைது செய்யப்படுவதை நான் விரும்பவில்லை என்று ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…